×

வீடியோ காலில் நிர்வாண போஸ் கொடுத்து மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் பாஜ பிரமுகரான தாளாளர் கைது: நர்சிங் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தால் நடவடிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்ேகாட்டையில் நர்சிங் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விவகாரத்தில், பாஜ நிர்வாகியான கல்லூரி தாளாளர் கைதானார். மாணவ, மாணவிகள் போராட்டத்தையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பழைய பேருந்து நிலையம் ரோட்டில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. 300க்கும் மேற்பட்ட வெளியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியின் தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ். விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜ சிறுபான்மை பிரிவு தலைவராகவும் உள்ளார். இவர் தனது கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவி, தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் தனது செல்போனில் ஆபாச படங்களை அனுப்பியதாகவும், வீடியோகாலில் நிர்வாணமாக போஸ் கொடுத்ததாகவும் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், இதுகுறித்து சக மாணவிகளிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை 9.30 மணியளவில் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாளாளரை கைது செய்யக்கோரி கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து வந்த போலீசார் மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டார். மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விவகாரத்தில், கல்லூரி தாளாளரான பாஜ நிர்வாகி கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.எந்தெந்த பிரிவின் கீழ் வழக்குதாஸ்வின் ஜான் கிரேஸ் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், 354 ஏ – பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்தல், 354 பி- பாலியல் உறவுக்காக தொந்தரவு செய்தல், 354 சி- பெண் நிர்வாண வீடியோவை பார்த்தல், 506- அந்தரங்க வீடியோவை அனுப்பச் சொல்லி மிரட்டுதல், ஒரு பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசுவது, ஆதிதிராவிடர் பழங்குடியின பெண்ணிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்….

The post வீடியோ காலில் நிர்வாண போஸ் கொடுத்து மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் பாஜ பிரமுகரான தாளாளர் கைது: நர்சிங் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Arupukottai ,BJP ,college ,
× RELATED ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்கு!!